Sunday, July 29, 2018
Thursday, January 25, 2018
வேடந்தாங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் பெய்யத் தொடங்கி இருக்கிறது.
இதனால் வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள வெள்ளைப்புத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்குப் பறவைகளின் வருகை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.
இந்த செய்தி கண்ணில் பட்டதும் ஒரு முறை சென்று வரலாம் என்று நினைதேன். அதற்கு ஏற்றார் போல் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதில் ஒரு ஓய்வு நாளில் பயணம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நோக்கி...
சென்னைக்கு மிக அருகில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தை எத்தனை பேர் பார்த்திப்பார்கள் என்று தெரியவில்லை.
எங்கள் ஊரிலிருந்து சரியாக 100கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விழுபுரத்திலிருந்து 9மணிக்கு கிளம்பி மதுராந்தகம் தாண்டி லெப்ட் சைடு வேடந்தாங்கல் ரோடு பிரிகிறது.
அங்கிருந்து 12கிலோமீட்டர் தொலைவில் சரணாலயம் செண்டி அடையாலம். இது ஒரு சிறிய கிராமம், இங்கு ஹோட்டல் எதுவும் இல்லை. ஆதலால் முன்பே திட்டமிட்டு கொள்வது நல்லது.
இந்த ஏரியில் உள்ள காடுகளானது பல்வேறு வகையான பறவைகளுக்கு வசிப்பிடமாக உள்ளது. பறவைகளைப் பார்வையிட ஏரியை சுற்றி பாதை அமைக்க பட்டுள்ளது.
பறவைகள் இனப்பெருக்கம் காலமான டிசம்பர் மற்றும் ஜனவரியில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் பருவத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40,000க்கும் அதிகமான பறவைகள் (26 அரிய வகைகளும் அடங்கும்) சரணாலயத்துக்கு வருகை தருகின்றன.
இலங்கை, பர்மா, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 30 வகையான பறவை இனங்கள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் பிப்ரவரியிலிருந்து ஒவ்வொரு பறவை இனமாக வெளியேறத் தொடங்கிவிடும். தண்ணீர் தொடர்ந்து இருந்தால், சில குஞ்சுகள் வளர்ந்து இங்கேயே இனப்பெருக்கம் செய்ய நினைக்கும்.
சுற்றுவட்டார ஏரிகளில் தண்ணீர் இருந்தால், பறவை வாழ்வதற்கான உணவுகள் இருக்கும். அதனால் பறவைகள் தொடர்ந்து இன்னொரு முறை இனப்பெருக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது. டிசம்பரில் அனைத்துப் பறவைகளும் வந்துவிடும். செப்டம்பரில் வந்த பறவைகள் டிசம்பரில் குஞ்சு பொறிக்க தொடங்கும். டிசம்பர் கடைசியிலிருந்து ஜனவரி வரை வந்தால் அனைத்துவிதமான பறவைகளையும் எந்த நேரத்திலும் கூட்டம் கூட்டமாகக் காணமுடியும்.
தற்போது நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருக்கின்றன. அதிகாலை நேரத்திலிருந்தே சில பறவைகள் இரைதேட கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவிடும். ஆண் பறவை, பெண் பறவை என மாறிமாறி அடைகாக்கவும் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகவும் எப்போதும் சில பறவைகள் கூடுகளிலேயே தங்கியிருக்கும்.
இரை தேடச் சென்ற பறவைகள் இடையிடையே வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துவிட்டுச் செல்லும். மாலை 3 மணிக்கு மேல் பறவைகள் வரத்தொடங்கும். 5 மணிக்கு மேல் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வந்துவிடும். அப்போது பறவைகளின் சத்தம் அதிகமாக இருக்கும். கூட்டம் கூட்டமாகப் பறவைகளின் வருகையைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
பைனாகுலர் 100 ரூபாய்க்கு 2மணி நேர வாடகைக்கு கிடைக்கிறது. பொறுமையாய் அமர்ந்து ஒரு ஒரு பறவையாக அதன் செயல்பாடுகள் அசைவுகள் இறை தேடும் முறைகள் என கவனித்து பார்க்க வேண்டும். சிறு வயதில் பார்த்த பறவைகளின் பெயர்களை அறிய நான் மேற்கொண்ட சிறு தேடல் இன்று பலபறவை இனங்களையும் அதன் வாழ்வியலையும் அறியமுடிகிறது. சலீம் அலி யின் புத்தகங்களை படிச்சு பாருங்க, பறவை காதலனா நீங்களும் மாறிடுவீங்க.
என் 7 வயது பையன் ஆர்வத்தோட பல பறவையின் பெயர்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டான். பசங்களும் ரொம்ப ஆர்வத்தோட பார்த்தாங்க.
நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட சுமார் 20 வகையான பறவைகள் இப்போது உள்ளன. செப்டம்பரிலிருந்து ஜனவரி வரை இனப்பெருக்கம் காலம். முட்டையிட்டு குஞ்சுகள் வளர்ந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் அவை கிளம்பிவிடும்.
இன்னும் மஞ்சள் மூக்கன் நாரை உள்ளிட்ட பறவைகள் வர வேண்டியுள்ளன.
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்து இருக்கும். நுழைவுக் கட்டணமாக நபருக்கு 5 ரூபாயும் கேமராவிற்கு 25 ரூபாயும் காருக்கு பார்க்கிங் 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
மொபைல் கேமராவிற்கும் 25 ருபாய் வசூலிப்பது நியாமாரே. மொபைல் கேமராவை வச்சு அங்க ஒரு காக்கவே கூட கிளோஸ்அப்ள போட்டோ எடுக்க முடியாது. அடுக்கி 25 ஓவர் பாஸ்.
முக்கியமான விஷயம், ஒரு நல்ல கேமரா இருந்த ரொம்ப நல்லருக்குமுன்னு உங்களுக்கு நான்சொல்லித்தான் தெரியனுமா என்ன?
இதனால் வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள வெள்ளைப்புத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்குப் பறவைகளின் வருகை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.
இந்த செய்தி கண்ணில் பட்டதும் ஒரு முறை சென்று வரலாம் என்று நினைதேன். அதற்கு ஏற்றார் போல் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதில் ஒரு ஓய்வு நாளில் பயணம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நோக்கி...
சென்னைக்கு மிக அருகில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தை எத்தனை பேர் பார்த்திப்பார்கள் என்று தெரியவில்லை.
எங்கள் ஊரிலிருந்து சரியாக 100கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விழுபுரத்திலிருந்து 9மணிக்கு கிளம்பி மதுராந்தகம் தாண்டி லெப்ட் சைடு வேடந்தாங்கல் ரோடு பிரிகிறது.
இந்த ஏரியில் உள்ள காடுகளானது பல்வேறு வகையான பறவைகளுக்கு வசிப்பிடமாக உள்ளது. பறவைகளைப் பார்வையிட ஏரியை சுற்றி பாதை அமைக்க பட்டுள்ளது.
பறவைகள் இனப்பெருக்கம் காலமான டிசம்பர் மற்றும் ஜனவரியில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் பருவத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40,000க்கும் அதிகமான பறவைகள் (26 அரிய வகைகளும் அடங்கும்) சரணாலயத்துக்கு வருகை தருகின்றன.
இலங்கை, பர்மா, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 30 வகையான பறவை இனங்கள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் பிப்ரவரியிலிருந்து ஒவ்வொரு பறவை இனமாக வெளியேறத் தொடங்கிவிடும். தண்ணீர் தொடர்ந்து இருந்தால், சில குஞ்சுகள் வளர்ந்து இங்கேயே இனப்பெருக்கம் செய்ய நினைக்கும்.
தற்போது நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருக்கின்றன. அதிகாலை நேரத்திலிருந்தே சில பறவைகள் இரைதேட கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவிடும். ஆண் பறவை, பெண் பறவை என மாறிமாறி அடைகாக்கவும் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகவும் எப்போதும் சில பறவைகள் கூடுகளிலேயே தங்கியிருக்கும்.
பைனாகுலர் 100 ரூபாய்க்கு 2மணி நேர வாடகைக்கு கிடைக்கிறது. பொறுமையாய் அமர்ந்து ஒரு ஒரு பறவையாக அதன் செயல்பாடுகள் அசைவுகள் இறை தேடும் முறைகள் என கவனித்து பார்க்க வேண்டும். சிறு வயதில் பார்த்த பறவைகளின் பெயர்களை அறிய நான் மேற்கொண்ட சிறு தேடல் இன்று பலபறவை இனங்களையும் அதன் வாழ்வியலையும் அறியமுடிகிறது. சலீம் அலி யின் புத்தகங்களை படிச்சு பாருங்க, பறவை காதலனா நீங்களும் மாறிடுவீங்க.
என் 7 வயது பையன் ஆர்வத்தோட பல பறவையின் பெயர்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டான். பசங்களும் ரொம்ப ஆர்வத்தோட பார்த்தாங்க.
நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட சுமார் 20 வகையான பறவைகள் இப்போது உள்ளன. செப்டம்பரிலிருந்து ஜனவரி வரை இனப்பெருக்கம் காலம். முட்டையிட்டு குஞ்சுகள் வளர்ந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் அவை கிளம்பிவிடும்.
இன்னும் மஞ்சள் மூக்கன் நாரை உள்ளிட்ட பறவைகள் வர வேண்டியுள்ளன.
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்து இருக்கும். நுழைவுக் கட்டணமாக நபருக்கு 5 ரூபாயும் கேமராவிற்கு 25 ரூபாயும் காருக்கு பார்க்கிங் 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
மொபைல் கேமராவிற்கும் 25 ருபாய் வசூலிப்பது நியாமாரே. மொபைல் கேமராவை வச்சு அங்க ஒரு காக்கவே கூட கிளோஸ்அப்ள போட்டோ எடுக்க முடியாது. அடுக்கி 25 ஓவர் பாஸ்.
முக்கியமான விஷயம், ஒரு நல்ல கேமரா இருந்த ரொம்ப நல்லருக்குமுன்னு உங்களுக்கு நான்சொல்லித்தான் தெரியனுமா என்ன?
Labels:
Bird Sanctuary,
birds,
traval,
Vedanthangal,
பயணம்
சிட்டுக்கு ஒரு வீடு
பழைய அட்டைப்பெட்டி வீடு இப்போ ரொம்ப டேமேஜ் ஆனதால நம்ம வீட்டு சிட்டுக்கு இப்போ ஒரு புது வீடு செய்யலாம்...
தேவை:
கொஞ்சம் ப்ளைவுட் துண்டுகள், ஆணி, அரம், சுத்தி மற்றும் கொஞ்சம் அறிவு.
ஓரளவுக்கு வீடு மாதிரி இருக்குனு நெனைக்கிறேன்.
பழய வீடு |
தேவை:
கொஞ்சம் ப்ளைவுட் துண்டுகள், ஆணி, அரம், சுத்தி மற்றும் கொஞ்சம் அறிவு.
ஸ்கெட்ச் ரெடி |
ப்ளைவுட் பீஸ் |
ஓரளவுக்கு வீடு மாதிரி இருக்குனு நெனைக்கிறேன்.
வாசலுக்கு கதவு எல்லாம் இல்ல. |
உட்கார கொஞ்சம் இடம் |
வீடு ரெடி, வாசல் தான் கொஞ்சம் எலி கடிச்ச மாதிரி இருக்கு. |
வீடு கட்டி ரெண்டு நாளாகுது இன்னும் இந்த சிட்டுக்கு வீடு கண்ணுக்கு தெரியல போல.
ம்ம்ம்ம் வெயிட் பண்ணலாம்.
வந்தாச்சு ....புது வீட்டுக்கு வரதுக்கு அஞ்சு நாள் ஆச்சு இவர்க்கு.
நல்ல ஸ்டராங்கா கட்டின வீடு. இப்போ ஜாலியா?
-------------------------------------------
இந்த சின்ன குருவிக்கு இந்த மாதிரி ஒரு வீடு கட்ட நீங்களும் ட்ரை பண்ணலாமே. நம்ம வீட்டு வாலுகளும் நல்லா என்ஜாய் பண்ணுவாங்க..
பாவம்.., மனிதர்களை மட்டுமே நம்பி வாழ கூடிய இந்த சிறிய பறவை இனத்தை அழிய விட கூடாது.
Tuesday, January 2, 2018
கடப்பா உனக்கு.. மடப்பா எனக்கு..
இரண்டு நாள் பயணமாக ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள பெலும் குகைகள், கந்திகோட்டா , மற்றும் லீபக்ஷி சென்று வந்தது பற்றி ஒரு பயண கட்டுரை.
இந்தியாவில் அதிகம் அறியப்படாத இடங்களின் பெலும் மற்றும் கந்திகோட்டா போன்றவைகள் அடக்கம். தற்செயலாக இணையத்தில் பார்க்கும் பொது கந்திகோட்டா பள்ளத்தாக்குகளின் படங்களை பார்த்துவிட்டு இந்தியாவில் இப்படி ஒரு இடமா என ஆச்சர்யமாக இருந்தது. மேலும் இந்த தேடுதலில் அதன் அருகிலேயே பெலும் குகைகளும் இருப்பதை தெரிந்து கொண்டேன். அந்த படங்களை பார்க்கும் போது என்னுடைய பயண லிஸ்டில் இந்த இடங்கள் முதலிடம் வந்தது. டிசம்பர் மாதம் சிறந்து என்பதால் உடனே இங்கு செல்ல தயாரானோம்.
கந்திகோட்டாவில் தங்குவதற்கு உள்ள ஒரே இடம் APTDC கெஸ்ட் ஹவுஸ் மட்டுமே. Online Reserve பண்ண முடியும், ஒரு AC ரூமுக்கு 1100 INR வருகிறது.
Room Online booking:
http://aptdc.in/aptdc/wrs/reservation/onlineBookingHotel.jsp
4.30am மணிக்கு அலாரம் அடிச்சாலும் நாம வண்டி ஸ்டார்ட் பண்ணறதுக்கு வழக்கம் போல 6.30am ஆச்சு. டீசல் புல் பண்ணி BEGUR ல இருந்து ஏர்போர்ட் ரோடு வழியா காலைநேர பனிமூட்டம் பிளஸ் டிராபிக் இல்லாத பெங்களூரு சூப்பர்னு தான் சொல்லணும். டிராபிக் நகர்ந்து நகர்ந்து போய்கிட்டு இருந்த நம்ம காருக்கு டிராபிக் இல்லாத பெங்களூரு பார்த்ததும் ரொம்ப குஷியாடுச்சி.
பெங்களூரு ஹைதராபாத் ரோடு வழில ஹோட்டல்ஸ் ரொம்ப கம்மிதான். ஒரு ஹோட்டல மசால் தோசை இட்லி சாப்பிட்டு அனந்தப்பூர் முன்னாடியே GOOTY ரோட்ல ஒரு ரைட் எடுத்தா அதுக்கப்பறம் புல்லா வில்லேஜ் ரோடு தான்.
இங்கு பெரும்பான்மையான இடங்கள் பாலைவனம்போல தான் காட்சியளிக்கிறது. ஜெய்ப்பூர் டூ ஜைசால்மர் போனபோது பார்த்த இடங்கள் போலவே இருந்தது. ஆனாலும் நிறைய இடங்களில் கிடைக்கிற நீரை வைத்து சொட்டுநீர் பாசன முறையில் விவசாயமும் பார்க்கிறார்கள்.
கிராமங்கள் தோறும் YSR சிலைகள், கடப்பா கல்லை கொண்டு கட்டிய வீடுகள் எல்லாம் தாண்டி பெலும் அடைவதற்கு 11.30 ஆகிவிட்டது. குகைக்கு செல்லும் வழியில் புத்தர் சிலை நம்மை வவேற்கிறது. சூரிய ஒளியில் பிரகாசத்தில் புத்தர் சிலை பார்க்க அருமையாக இருந்தது.
பெலும் குகை (Belum Caves) இந்தியத் துணைக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகையும் இந்திய துணைக்கண்டத்தில் சமவெளியில் அமைந்த நீளமான குகையும் ஆகும். இது, இங்குள்ள கூரைப்படிகக் கூம்பு மற்றும் படிகப்புற்று அமைப்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறது. நீண்ட வழிகளும், பெரிய அறைகளும் நன்னீர் காட்சிகளும் வடிகுழாய்களும் இக்குழாயில் காணப்படுகின்றன. இது நிலத்தடி நீரோட்டத்தால் நிலத்திற்கடியிலமைந்த இயற்கைக் குகை. "பிலும்" என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து இக்குகையின் பெயர் அமைந்துள்ளது. தெலுங்கில் இக்குகை "பெலும் குகாலு" என அழைக்கப்படுகிறது. இதன் நீளம் 3229 மீட்டர்கள் ஆகும்.
1884 இல் பிரித்தானிய நிலவியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு ஃபூட்டால் இக்குகை கண்டறியப்பட்டது. 1982-84 இல் ஜெர்மானியக் குகை ஆய்வாளர் ஹெச். லேனியல் கெபார் (H Daniel Gebauer) தலைமையிலமைந்த குழுவால் மேலும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு 1988 இல் ஆந்திரப்பிரதேச அரசால் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டது, 2002 இல், ஆந்திரப் பிரதேச அரசின் சுற்றுலாத்துறையால் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டது. 3.5 கிமீ நீளம் வரை குகை ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் 1.5 கிமீ வரைமட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நபர் ஒன்றுக்கு 65 ருபாய் டிக்கெட் செலுத்த வேண்டும். கொஞ்சம் ஓவர் தான். சில படிக்கட்டுகள் இறங்கி உள்ளே சென்றால் ஒரு ஹால் நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து இந்த குகை ஆரம்பித்து 3 கிலோமீட்டர் பரப்பளவிற்கு பூமியில் அடியில் பறந்து விரித்துள்ளது. குகைக்கு மேலே விவசாயம் எல்லாம் ஜோராக நடந்து கொண்டிருக்க உள்ளே மயான அமைதியாய் ஒரு பெரிய குகை. நீரோட்டம் இருந்ததுக்கான அடையாளம் தெள்ளந்தெளிவாக உள்ளது. வளைந்து வளைந்துமேலும் கீழுமாக நாம் 1.5கிலோமீட்டர் வரை செல்ல முடியும். உள்ளே சில ஊற்றுகளும் பெரிய அறைகளும் கூட பார்க்க முடியும். காற்று உள்ளே வர சில துளைகள் செயற்கையை போடப்பட்டு காற்று வர வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதிக கூட்டமில்லாத இந்த இடத்தை நிதானமா பார்க்கலாம். நாங்கள் உள்ளேசெல்லும் போது கரெண்ட் கட்டாகி இரண்டு நிமிஷம் கும்மிருட்டில் அசையாமல் நின்றிருந்தோம், மொபைல் சார்ஜ் டவுன். இங்கேய சும்மா சிங்கவாயில், நரி குகை என்று சொல்லிக்கொண்டு சுற்றும் ஒன்றிரண்டு கைடுகளும் உள்ளனர். ஏமாற வேண்டாம்.
1.30 மணி நேரம் உள்ளே இருந்துவிட்டு வெளியே வரும்போது பங்குனி வெயில் கூட 10டன் ஏரகண்டிஷன் ரூம் போல இருக்கு. அவளோ ஹீட் உள்ளே. அங்கேயே ஒரு சிறு ஸ்னாக்ஸ் ஷாப் இருக்கு. அங்கே பிரைட் ரைஸ் மற்றும் கீ ரைஸ் கிடைக்கிறது. லன்ச் முடித்துக்கொண்டு 2.30மணிக்கு கிளம்பி மறுபடியும் கடப்பா குவாரிகளை கடந்து ஒன்னரை மணி நேர பயணத்தில் கந்திகோட்டா சென்று அடைந்தோம்.
கந்திகோட்டாவில் தங்க.. திங்க.. இருக்கும் ஒரே இடம் ஹரிதா APTDC கெஸ்ட் ஹவுஸ் மட்டுமே. ரூம் மற்றும் உணவு ஓகே ரகம் தான். காரை நாம் தங்கியிருக்கும் ரூமுக்கு அருகிலேயே பார்க் பண்ண முடிகிறது.
மாடியில் இருந்து பார்க்கும் போது கோட்டை மதில் சுவர்களும் ஒரு கோபுரமும் தெரிகிறது. Refresh செய்து கொண்டு சூரிய அஸ்தமனம் பார்க்கலாம் என்று கிளம்பினோம். அங்கிருந்து 5 நிமிட பயணத்தில் கந்திகோட்டா இருக்கிறது.
கந்திகோட்டா (Gandikota) பெண்ணாறுக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.
கந்திகோட்டாவானது சக்திவாய்ந்த தெலுங்கு மரபினரான பெம்மாசனி மரபினரின்
ஆட்சியின் கீழ் இருந்தது. இவர்களால் இங்கு கட்டப்பட்ட கோட்டையானது நாட்டின்
மிக முக்கியமான கோட்டையாகவும் இருந்தது. கந்திகோட்டா என்ற பெயரில் உள்ள ‘கந்தி’ என்றால் தெலுங்கில் பள்ளத்தாக்கு
என்று பொருள். கோட்டா என்றால் கோட்டை என்பதாகும். இங்கு ஒரு பெரிய
பள்ளத்தாக்கு உள்ளதால் இப்படி அழைக்கப்படுகிறது.
கோட்டைக்குள்ளேயும் சில வீடுகளை பார்க்க முடிகிறது. அந்த பாதையில் கடைசியில் ஒரு மண்டபம்.
காரை பார்க் செய்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் யாரும் இல்லை. அந்த மாலை வேலையில் யாருமற்ற அந்த கோட்டை சற்று பயமுறுத்துவதாவே தோண்றியது. சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வேகமாய் கணவாய் பார்க்கலாம் என்று அங்கிருந்து ஒரு 100மீட்டர் தொலைவில் பாறை குவியலுக்கு நடுவில் சென்று பார்த்த போது ஒரு பறந்து விரிந்த பாலை நிலம் போல் இருக்கும் அந்த இடத்தில செல்லும் அந்த கணவாய் நிச்சயம் ஒரு அருமையான காட்சிதான். தாஜ்மஹால் எப்படி புகைப்படத்திலும், சினிமாவிலும் காணும் தோற்றத்தை விட நேரில் பார்க்கும்போது வியக்க வாய்க்குமோ அப்படி தான் இந்த கணவாய் என்னை வியக்கவைத்தது. இங்கு பாயும் பென்னாறு நதியானது இங்குள்ள எர்ராமலையின் குறுக்கே ஓடுவதால் இந்தப் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகளை வெட்டி, அவற்றைக் கைகளால் அடுக்கி வைத்ததுபோல் உள்ளது.
இங்கு சிவப்பும் மஞ்சளும் பழுப்புமாகப் பல்வேறு வண்ணங்களில் பாறைகள் மிக அழகாகக் காணப்படுகின்றன. இரண்டு பக்கமும் உள்ள பாறை அடுக்குகளுக்கு நடுவே 300 அடி பள்ளத்தாக்கில் பென்னாறு ஓடுவது அற்புதமான காட்சியாக உள்ளது. வனப்பகுதிகளில் அமைந்திருக்கும் இந்த அழகிய நிலப்பரப்பு பரந்த இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது.
பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை பசேலென மரம், செடி கொடிகள் எவ்வளவு அழகோ அதேபோல் இந்த கணவாயும் இயற்கையின் மற்றுமொரு குழந்தைதான்.
மீண்டு காலை மற்றோருமுறை சென்று சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டு மதிய உணவை முடித்து கொண்டு. புறப்பட்ட நாங்கள் 5 மணி அளவில் லீபக்ஷி சென்ரோம். கோவிலில் உள்ள தொங்கும் தூண் மூலம் இந்த கோவில் பிரபலமடைந்து உள்ளது. தென் இந்தியாவில் கருங்கல்
கோவிலின் மேல்புறம் சுதை மூலம் சமப்பரப்பை உண்டாக்கி அதில் இயற்க்கை வண்ணம் கொண்டு ஓவியம் வரையும் முறையை பார்ப்பது அரிது. இந்த கோவிலில் அப்படி சில ஓவியங்கள் காண முடிந்தது. அதிக நேரம்மின்மயால் உடனே கிளம்பி பெங்களூரு வந்தபோது மணி 10.00.

Andra,
Belum Caves,
Gandikotta,
Grand Canyon,
Hanging Piller,
Leepakshi,
weekend trip,
பயணம்
Subscribe to:
Posts (Atom)