Thursday, January 25, 2018

வேடந்தாங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் பெய்யத் தொடங்கி இருக்கிறது.
இதனால் வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள வெள்ளைப்புத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்குப் பறவைகளின் வருகை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.


இந்த செய்தி கண்ணில் பட்டதும் ஒரு முறை சென்று வரலாம் என்று நினைதேன். அதற்கு ஏற்றார் போல் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதில் ஒரு ஓய்வு நாளில் பயணம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நோக்கி...
சென்னைக்கு மிக அருகில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தை எத்தனை பேர் பார்த்திப்பார்கள் என்று தெரியவில்லை.எங்கள் ஊரிலிருந்து சரியாக 100கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விழுபுரத்திலிருந்து 9மணிக்கு கிளம்பி மதுராந்தகம் தாண்டி லெப்ட் சைடு வேடந்தாங்கல் ரோடு பிரிகிறது.

அங்கிருந்து 12கிலோமீட்டர் தொலைவில் சரணாலயம் செண்டி அடையாலம். இது ஒரு சிறிய கிராமம், இங்கு ஹோட்டல் எதுவும் இல்லை. ஆதலால் முன்பே திட்டமிட்டு கொள்வது நல்லது.
இந்த ஏரியில் உள்ள காடுகளானது பல்வேறு வகையான பறவைகளுக்கு வசிப்பிடமாக உள்ளது. பறவைகளைப் பார்வையிட ஏரியை சுற்றி பாதை அமைக்க பட்டுள்ளது.
பறவைகள் இனப்பெருக்கம் காலமான டிசம்பர் மற்றும் ஜனவரியில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் பருவத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40,000க்கும் அதிகமான பறவைகள் (26 அரிய வகைகளும் அடங்கும்) சரணாலயத்துக்கு வருகை தருகின்றன.
இலங்கை, பர்மா, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 30 வகையான பறவை இனங்கள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் பிப்ரவரியிலிருந்து ஒவ்வொரு பறவை இனமாக வெளியேறத் தொடங்கிவிடும். தண்ணீர் தொடர்ந்து இருந்தால், சில குஞ்சுகள் வளர்ந்து இங்கேயே இனப்பெருக்கம் செய்ய நினைக்கும்.

சுற்றுவட்டார ஏரிகளில் தண்ணீர் இருந்தால், பறவை வாழ்வதற்கான உணவுகள் இருக்கும். அதனால் பறவைகள் தொடர்ந்து இன்னொரு முறை இனப்பெருக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது. டிசம்பரில் அனைத்துப் பறவைகளும் வந்துவிடும். செப்டம்பரில் வந்த பறவைகள் டிசம்பரில் குஞ்சு பொறிக்க தொடங்கும். டிசம்பர் கடைசியிலிருந்து ஜனவரி வரை வந்தால் அனைத்துவிதமான பறவைகளையும் எந்த நேரத்திலும் கூட்டம் கூட்டமாகக் காணமுடியும். 


தற்போது நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருக்கின்றன. அதிகாலை நேரத்திலிருந்தே சில பறவைகள் இரைதேட கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவிடும். ஆண் பறவை, பெண் பறவை என மாறிமாறி அடைகாக்கவும் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகவும் எப்போதும் சில பறவைகள் கூடுகளிலேயே தங்கியிருக்கும்.

இரை தேடச் சென்ற பறவைகள் இடையிடையே வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துவிட்டுச் செல்லும். மாலை 3 மணிக்கு மேல் பறவைகள் வரத்தொடங்கும். 5 மணிக்கு மேல் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வந்துவிடும். அப்போது பறவைகளின் சத்தம் அதிகமாக இருக்கும். கூட்டம் கூட்டமாகப் பறவைகளின் வருகையைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். 

பைனாகுலர் 100 ரூபாய்க்கு 2மணி நேர வாடகைக்கு கிடைக்கிறது. பொறுமையாய் அமர்ந்து ஒரு ஒரு பறவையாக அதன் செயல்பாடுகள் அசைவுகள் இறை தேடும் முறைகள் என கவனித்து பார்க்க வேண்டும். சிறு வயதில் பார்த்த பறவைகளின் பெயர்களை  அறிய நான் மேற்கொண்ட சிறு தேடல் இன்று பலபறவை இனங்களையும் அதன் வாழ்வியலையும் அறியமுடிகிறது. சலீம் அலி  யின் புத்தகங்களை படிச்சு பாருங்க, பறவை காதலனா  நீங்களும் மாறிடுவீங்க.

என் 7 வயது பையன் ஆர்வத்தோட பல பறவையின் பெயர்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டான். பசங்களும் ரொம்ப ஆர்வத்தோட பார்த்தாங்க.


நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட சுமார் 20 வகையான பறவைகள் இப்போது உள்ளன. செப்டம்பரிலிருந்து ஜனவரி வரை இனப்பெருக்கம் காலம். முட்டையிட்டு குஞ்சுகள் வளர்ந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் அவை கிளம்பிவிடும்.

இன்னும் மஞ்சள் மூக்கன் நாரை உள்ளிட்ட பறவைகள் வர வேண்டியுள்ளன. 

காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்து இருக்கும். நுழைவுக் கட்டணமாக நபருக்கு 5 ரூபாயும் கேமராவிற்கு 25 ரூபாயும் காருக்கு பார்க்கிங் 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மொபைல் கேமராவிற்கும் 25 ருபாய் வசூலிப்பது நியாமாரே. மொபைல் கேமராவை வச்சு அங்க ஒரு காக்கவே கூட கிளோஸ்அப்ள போட்டோ எடுக்க முடியாது. அடுக்கி 25 ஓவர் பாஸ். 

முக்கியமான விஷயம், ஒரு நல்ல கேமரா இருந்த ரொம்ப நல்லருக்குமுன்னு  உங்களுக்கு நான்சொல்லித்தான் தெரியனுமா என்ன?