Wednesday, December 27, 2017

Hogenakkal - ஒகனேக்கல்

இது பெங்களூரில் இருந்து 180 (via NH7) கிமீ தொலைவிலும், தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒரு நாள் பயணமாக ஓகனேக்கல் சென்று வரலாம் என்று முடிவாகி கிளம்பினோம். ஏற்கனவேய சென்ற இடம் என்பதால் பெரிதாக எதுவும் முன்னேற்பாடுகள் செய்யவில்லை. பெங்களூரில் காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி அளவில் ஒகனேக்கல் சென்று அடைந்தோம். தருமபுரி வரை நன்கு வழி சாலையாகவும் தருமபுரியில் இருந்து மாநில, கிராம சாலை வழியாகவும் செல்லவேண்டும். நாம் முன்பு ஒருமுறை வரும் போது சாலை மிக மோசமாக இருந்தது, இப்போது நன்றாக உள்ளது.

பெங்களூரு இருந்து கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அனேகல்  என்ற ஊர் வழியாகவும் இந்த அருவியை சென்று அடையாளம். ஆறின் ஒரு பக்கம் தமிழகமாகவும் மறுபக்கம் கர்நாடக எல்லையாகவும் அமைந்துள்ளது.

ஊரின் எல்லையிலும் மற்றும் பார்க்கிங் கட்டணம் என்று இரு முறை வசூல் நடைபெறுகிறது. இப்பலாம் எங்க போனாலும் ஒரு சீட்டும் பையுமா வசூல் செய்வது சாதாரணம் ஆகிவிட்டது.

கார் பார்க்கிங் செய்ய செல்லும் போது ஒருவர் வந்து தோணி  சவாரி செய்ய வேண்டுமா என கேட்டு அழைத்து சென்றார்.
ஒரு படகுக்கு 600 ரூபாய்  4 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி. 5 வயதுக்குட்பட்ட குழைந்தைகளுக்கு அனுமதி இல்லையென்றபோதும் படகோட்டி அதுஎல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க சார் என்று  சொல்லி அழைத்து சென்றார். டிக்கெட் வாங்கிய பின்பு நிறைய படகு இருந்தும் ஒரு பெரிய க்யூ இருந்த கரணம் தேவையான அளவு லைப் ஜாக்கெட் இல்லாததே.

நமக்கு வாய்த்த படகோட்டி திறமையாய் போராடி(பிராடு பண்ணி ) மூன்று லைப் ஜாக்கெட்டு கொண்டு  வந்தார். இல்லை என்றல் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிடும். படகு என்றல் அது மரத்தால் ஆன அல்லது  பைபரால் ஆன படகு அல்ல, மூங்கில் மற்றும் சாக்கால் செய்த ஒரு பெரிய சைஸ் கூடை. நீர் புகாமல் இருக்க தார் கொண்டு அடிப்பகுதி பூசப்பட்டு இருக்கிறது.
படகில் ஏறி அமர சில சாகசங்கள் செய்ய வேண்டி உள்ளது. சிறிது தூர அமைதியான பயணத்திற்கு பின்பு மீண்டும் இறங்கி சிறிது தூரம் நடந்து  செல்ல வேண்டும். படகோட்டி அந்த படகை தூக்கி கொண்டு நம்முடனே நடந்து வருகிறார். சில நிமிட பயணத்தின் பின்பு அருவியின் ஓசை பெரும் இரைச்சலாய் கேட்கிறது. அருவியின் அழகை பார்க்கும் போது பிரமிப்பை உள்ளது. இதுதான் அருவி கொட்டும் இடம் என்று இல்லாமல் கிடைத்த கேப்பு எல்லாம் தண்ணி வெண்மை நுரையோடு கொட்டுவதை பார்க்கும் போது  கொஞ்சம் பயமும் வரத்தான் செய்கிறது. என்னடா இது மூங்கில் கூடையோட இப்படி ஆர்பரிக்கின்ற அருவி கேப்புல எப்படி போகப்போறோமுன்னு தோணிச்சு, இருந்தாலும் வெளிய காட்டிகளை. லைப் ஜாக்கெட் இருக்கில்ல...

பிறகு நம் பயணம் மீண்டும் துவங்கி சில அருவிகளின் ஆக்ரோஷத்தை நெருங்கி சென்று நீரில் நனைவது படகை சுழல விடுவது போன்ற விளையாட்டுகளை செய்து குழந்தைகளை மகிழ்வைக்கிறார்கள். பின்பு மலைகளின் நடுவில் இருந்து ஒரு அமைதியான நதியாக மாறி வருகிறது. கரை ஓரத்திலே அந்த கிராமத்து பெண்கள் சுவையான மீன் பொரித்து தருகிறார்கள். 4 மீன்கள் 100 ரூபாய்.
அங்கு ஒரு சிறு மணல் திட்டு உள்ளது. அங்கு சிறிது நேரம் ஆழம் குறைந்த பகுதியில் குழந்தைகளை விளையாட விடும் பொது ரொம்பவே என்ஜோய் செய்வார்கள். நாமும் கொஞ்ச நேரம் இளைப்பாறலாம், பட் வெயில் கொஞ்சம் ஓவர். சன்கிளாஸ், குடை அவசியம் எடுத்து செல்லுங்கள்.

இங்கிருந்து பார்த்தாலே கர்நாடக டூரிசம் படகு சவாரி வருவோரையும் பார்க்க முடியும்.   மீண்டும் வந்த வழியே பயணம் திரும்பி புறப்பட்ட இடத்தை வந்து அடையும் போது மணி 3. வயிறு கப கப. சுவையான மீனுடன் சுட சுட சோறும் கிடைக்கும், நல்லா ஒரு புடி புடிக்கலாம்.

படகு பயணம் வேண்டாம் என்பவர்கள் அருவியின் அழகை ரசிக்கலாம். அதற்காக தனி பாலம் அமைத்தும், குளிப்பதற்கும் அருவியில் இடமும்  உண்டு .






 அனால் படகு பயணமும் மீன் வறுவலும் இல்லாத ஒகனேக்கல் பயணம் முடிவடையது என்பேன்.