Friday, September 30, 2016

Bandipur, Iruppu Falls, Kabini Dam - 3

அருவியோட அமைப்பு, தண்ணியோட அளவு + வேகம், அருவியோட வரலாறு, புவியில், தமிழ், இங்கிலிஷ் எல்லாத்தயும் கூடி கழிச்சு பார்த்தா இதுல குளிக்கறது கொஞ்சம் டேஞ்சர்னு முடிவு பண்ணிட்டோம். அனாலும் அந்த அருவி சாரல், அருவி எழுப்பும் சத்தம் இதலாம் கொஞ்சம் நேரம் நின்னு அனுபவிக்காம விடக்கூடாது. உட்காரத்துக்கு ஒரு சின்ன கனகிரீட் மேடையும் இருக்கு. அங்கிருந்து கிளம்ப மனம் வரவில்லை என்றாலும் கடமை வா வா என அழைப்பதால் அருவியை பிரிய மனம் இல்லாமல் பிரிய நேர்ந்தது.


ஐந்து மணி போல அங்கிருந்து கிளம்பி மீண்டும்  இரண்டு மணிநேர காட்டுவழி பயணத்தில் நாங்கள் தங்கும்மிடமான வயநாடு அடைந்தோம். இது ஒரு சிறிய நகரம் என்றாலும் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகம் தான். சிறிது ஓய்வுக்கு பின் கொஞ்சம் நகர்வலம் செல்ல முடிந்தது. மற்ற கேரளா சிறு நகரங்களை போலத்தான் வாயநாடும் இருக்கு. அதே நேந்திரப்பழம், அல்வா...



முகுர்த்தம் பத்து மணிக்குத்தான், நண்பர்கள் எல்லாம் லேட்டா தான் வருவாங்கனு அவனுக்கு தெரியும்? பத்துமணி என்பதால் எழுந்து கிளம்ப கொஞ்சம் வசதியா இருந்துது...கோவில்லதான் கல்யாணம், மலைமேல ஒரு சின்ன ஓட்டு வீடு, அதுதான் கோயில், கல்யாணத்துக்குகான மொத்த நேரம் பதிமூன்று நிமிடங்கள் தான்.  அப்புறம் பையன் வீட்ல சாப்பாடு. மேட்டர் ஓவர்.

மதியம் இரண்டு மணிக்கு கெளம்பி ஐந்து மணிக்கு கபினி அணை வந்தடைந்தோம். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரளவின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து அப்புறம் கர்நாடகதுக்கும்  தமிழ்நாடுக்கும் பிரச்சனைய கிளப்பி விட்டு பின் வங்காள விரிகுடாவில் முடிவடைகிறது.

மைசூரு மாவட்டத்தில் உள்ள பீச்சினஹல்லி எனும் ஊரில் கபினி ஆற்றின் குறுக்காய் இந்த ஆணை உள்ளது.



இது ஒரு சுற்றுலா தளம் இல்லை என்றாலும் ஏதோ ஒரு புக்ல இந்த பேர படிச்சா ஞாபகம். அதான் எப்டி இருக்கும்னு பார்க்கலாம்னு போனோம். சிறிய அளவிலான இந்த அணையில் மின்சார உற்பத்தியும் நடக்கிறது. அணையின் மேலே போய் பார்க்கமுன்னு ஏறினோம் இன்னும் பத்து ஸ்டேப் ஏறுனா நீர்பரப்பை பார்க்கலாமூணு ஆவலோட போன எங்களை தடுத்தது அணையின் மேல் செல்ல "அனுமதி இல்லை" என்ற போர்டு... இந்த போர்டை கிழ வச்சி இருந்தா படிக்கட்டு ஏறுனது மிச்சமாய் போயிருக்கும்.

எங்க நண்பன் ஒருவன் வாங்க மேல போகலாம், யாராவது தடுத்தா திரும்பிடலாமுன்னு சிம்பிளா சொல்லிட்டு மேல போக...நாங்களும் பின்தொடர.......


 நினைத்தது போலவே எங்களை இரண்டு அணைக்காவலர்கள் தடுத்து போர்டை படிக்கும் படி சொன்னார்கள். நாங்களும் புதுசா படிக்கற மாதிரி படிச்சுட்டு அப்டியே ஷாக்காகி நின்றோம் (நடித்தோம்). அப்புறம் என்ன நினைச்சானோ சரி வந்து பாருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான் அந்த நல்லவன். பாவம் ரெண்டுபேரு மட்டும் எவளோ நேரம் ஒருத்தன் மூஞ்சிய இன்னொருவன் பாக்கறது, அதான் எங்கள விட்டுட்டானு நினைகிறேன்.




ரொம்ப பிரமாண்ட நீர்பரப்புனு சொல்ல முடியாது, பெரிய ஏறி போல இருந்தது, மாலை நேரமும் குளிர்ந்த காற்றும் கொஞ்சம் நேரம் எங்களை அங்கே இருக்க செய்தது.

முற்றும்.. பயணம் தொடரும்....