சிவன் கோவில்: இதை பாதாள சிவன் கோவில் என்று அழைக்கின்றர். இது நிலப்பரப்பில் இருந்து ஒரு பத்து அடி ஆழதில் அமைந்து உள்ளது. உள் பிரகார தரை பகுதி முழுவதும் மழை நீரினால் சூழப்பட்டு இருக்கிறது.
|
Underground siva |
|
Underground siva | |
Apocalypto
படத்தில் வருவது போன்ற ஒரு பாதி பிரமிட் வடிவ மேடை மேல் ஏறி
நின்று அழிந்து போன அந்த நகர அமைப்பும் தொல்லியல் துறை மீட்டிடடுத்த
கோட்டையின் அமைப்புகளையும் பார்க்கும் போது அந்த காலத்தின் உணர்வு நம்
மனதில் தோன்றி மறைகிறது.
|
View from pyramid |
இதன் அருகில் ஒரு ஜோடி பெரிய கல்லாலான கதவுகளை பார்க்கும் போது பாதி பிரமிட் வடிவ மேடை ஒரு பெரிய மண்டபமாகவோ அல்லது கோவிலாகவோ இருந்து பின்பு சிதிலமடைந்து இருக்கக்கூடும்.
|
Pyramid Basement |
|
Stone Doors |
மேலும் வழி எங்கும் சிலைகள் (நரசிம்ம, லிங்கம், விநாயகர்) கடந்து சென்றால் யானை பார்க்கிங் வருகிறது. இதன் அமைப்பை பார்க்கும் போதும் இஸ்லாமிய கட்டிடக்கலை போல்தான் தோன்றுகிறது.
|
Elephant parking |
Vitthala Temple: இந்த அழகிய கோவிலில் இருந்து ஒரு 500 மீட்டர் முன்பே நம் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து பாட்டரி கார் மூலம் மட்டுமே இந்த கோவிலை சென்று அடைய முடியும். இந்த பாட்டரி கார்கள் அனைத்தும் உள்ளூர் இளம் பெண்களாலே இயக்கப்படுகிறது. கோவிலை சுற்று சூழலில் இருந்து காப்பதும் ஆச்சு, உள்ளூர் பெண்களுக்கு வேலை கொடுப்பதும் ஆச்சு.
|
Vitthala Temple |
கர்நாடக மாநிலத்தின் சின்னமாக உள்ள கல்தேர் இங்குதான் உள்ளது. தேரின் முன்பு உள்ள யானைகள் பிற்பகுதியில் இணைக்க பட்டவை. தேரிலும் மண்டபத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் அருமை.
|
stone chariot |
Vitthala கோவிலின் உள்புரத்தில் உள்ள மண்டபங்களில் மேற்கூரைகள் மிகவும் சேதாரம் அடைந்து காணப்படுகிறது. மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போன்ற இசை தூண்கல் இந்த நாட்டிய மண்டபத்தின் சுற்றிலும் காணப்படுகிறது. பறந்துவிரிந்து காணப்படும் இந்த சமவெளி பகுதியில் தனியே அமைந்திருக்கும் இந்த கோவிலின் அழகை காணும் போது உள்ளத்தில் ஏற்படும் எண்ணங்களை விளக்க வார்த்தை இல்லை.
|
Shops |
|
Shops |
இக்கோவிலை சுற்றி உள்ள கல்தூண் மண்டபங்கள் எல்லாம் அந்நாட்களில் மிக முக்கியமான தங்க, வைர சந்தை நடக்கும் பகுதிகள்.
லோட்டஸ் மண்டபம்:
எல்லா நுழைவாயில் க்கும் சேர்த்து ஒருமுறை டிக்கெட் எடுத்தால் போதும். டிக்கெட் விலை பத்து மட்டும்.
|
லோட்டஸ் Temple |
இந்த மண்டபத்தின் உள்சுவர்களில் நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம்
நீர் செலுத்தப்படுவதால் வெளியில் இருக்கும் வெப்பம் சற்று உள்ளே குறைக்கப்படுகிறது. இதை சுற்றிலும் ஒரு பூங்கா பராமரிக்கபடுகிறது. கல்வி சுற்றுலா வந்த சில மாணவர்களை இங்கே சந்தித்தோம். மைசூர்-ல் இருந்து வருவதாக கூறினார்கள். எனக்கும் பாடப்புத்தகத்தில் விஜயநகர பேரரசு பற்றி படித்தது லைட்டா ஞாபகம்.
பயணம் தொடரும்...
No comments:
Post a Comment