Tuesday, July 26, 2016

HAMPI-2

ஹோஸ்பேட்டில் இருந்து ஒரு பதினைந்து இருபது நிமிட பயணத்தில் ஹம்பி  அடையாளம். ஹம்பியில் நிறைய வெளிநாட்டவர்களை பார்க்க முடிகிறது. கலை எங்கெல்லாம் இருக்கோ அங்கேயெல்லாம் இவர்களை பார்க்கலாம். நாம தான் இன்னும் காதலி காதலன் பெயரையும் எக்ஸாம் நம்பரையும் எழுதிக்கிட்டு இருக்கோம்.

ஹம்பி முழுவதுமாய் அழகிய கோவில்களும் மண்டபங்களும் நிறைந்து கிடக்கிறது. சிற்ப, கட்டட கலையில் நாட்டம் உள்ள அனைவருக்கும் ஹம்பி ஒரு சொர்கபூமிதான். ஒரு கோவிலுக்கும் மற்ற கோவிலுக்கும் குறைந்தது 500 mrts தூரம் இருக்கும். பொ  று  மை  யா  ரசிச்சு பாக்க ஒரு நாள் போதாது. ஏப்ரல் டு ஜூலை இந்த பக்கம் வந்துடாதீங்க, வெயில் உங்கள் பயணத்தை இனிமையாக்க விடாது. ஆகஸ்ட் டு மார்ச்-நன்று. நவம்பர் டிசம்பர் - மிக நன்று.
இங்கு சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றும் வெளிநாட்டவர்களை பார்க்க முடிகிறது.

முதலில் நம்மை வரவேற்பது  தலரிகட்ட கேட், இங்கு நம் வாகனத்தின் பதிவு எண் குறிக்கப்பட்ட பின்பு நம்மை உள்ளே அனுமதிக்கின்றர்.
தலரிகட்ட கேட்
Temple
பின்பு ஒரு கோவிலும் அதனை தொடர்ந்து பூங்காவுடம் அமைக்கப்பட்ட சிறு மண்டபமும் உள்ளது. வெளி தோற்றம் மண்டபம் போல கட்சி அளித்தாலும் உள்ளாய் அது ஒரு குளம். குளமும் (Indoor swimming pool) அதனை சுற்றி மண்டபமும் உள்ளது. இந்த குளத்திற்கு வரும் நீர் வழிகள் கலைநயம் மிக்க ஒன்று.
பூங்காவுடம் அமைக்கப்பட்ட சிறு மண்டபம்

Indoor swimming pool
அங்கிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி மற்றொரு குளம் (queen's bath) சினிமா படங்கள்ல பார்த்த இந்த குளம், நேரில் பார்க்கும் போது மிக அழகு. ராஜ வம்ச பெண்கள் குளிப்பதற்கு உள்ள இந்த குளத்தில் இந்து இஸ்லாமிய கூட்டு கட்டிடக்கலையை பார்க்க முடிகிறது. இதன் உள்ளே இறங்க தற்போது அனுமதி இல்லை.
Queen's bath
 இக்குளத்திற்கு நீர் வருவதற்கு 6 அடி உயரத்தில் கருங்கல்லினால் ஆன நீண்ட வாய்க்கால் அமைத்து இருப்பது அருமை. குளத்தில் அமைக்க பட்டிருக்கும் கற்களும் மற்ற கருங்கல்லை போல இல்லாமல் வழ வழப்பாக சலவை கற்களை போல உள்ளது. கோவிலும் மற்ற மண்டபங்களும் அடையாளம் காணப்பட்ட பின்புதான், முற்றிலும் மண் மூடியிருந்த இந்த குளத்தை கண்டுபிடித்து சீரமைக்கபட்டதாம்.

பயணம் தொடரும்...

No comments:

Post a Comment