Friday, September 30, 2016

Bandipur, Iruppu Falls, Kabini Dam - 3

அருவியோட அமைப்பு, தண்ணியோட அளவு + வேகம், அருவியோட வரலாறு, புவியில், தமிழ், இங்கிலிஷ் எல்லாத்தயும் கூடி கழிச்சு பார்த்தா இதுல குளிக்கறது கொஞ்சம் டேஞ்சர்னு முடிவு பண்ணிட்டோம். அனாலும் அந்த அருவி சாரல், அருவி எழுப்பும் சத்தம் இதலாம் கொஞ்சம் நேரம் நின்னு அனுபவிக்காம விடக்கூடாது. உட்காரத்துக்கு ஒரு சின்ன கனகிரீட் மேடையும் இருக்கு. அங்கிருந்து கிளம்ப மனம் வரவில்லை என்றாலும் கடமை வா வா என அழைப்பதால் அருவியை பிரிய மனம் இல்லாமல் பிரிய நேர்ந்தது.


ஐந்து மணி போல அங்கிருந்து கிளம்பி மீண்டும்  இரண்டு மணிநேர காட்டுவழி பயணத்தில் நாங்கள் தங்கும்மிடமான வயநாடு அடைந்தோம். இது ஒரு சிறிய நகரம் என்றாலும் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகம் தான். சிறிது ஓய்வுக்கு பின் கொஞ்சம் நகர்வலம் செல்ல முடிந்தது. மற்ற கேரளா சிறு நகரங்களை போலத்தான் வாயநாடும் இருக்கு. அதே நேந்திரப்பழம், அல்வா...



முகுர்த்தம் பத்து மணிக்குத்தான், நண்பர்கள் எல்லாம் லேட்டா தான் வருவாங்கனு அவனுக்கு தெரியும்? பத்துமணி என்பதால் எழுந்து கிளம்ப கொஞ்சம் வசதியா இருந்துது...கோவில்லதான் கல்யாணம், மலைமேல ஒரு சின்ன ஓட்டு வீடு, அதுதான் கோயில், கல்யாணத்துக்குகான மொத்த நேரம் பதிமூன்று நிமிடங்கள் தான்.  அப்புறம் பையன் வீட்ல சாப்பாடு. மேட்டர் ஓவர்.

மதியம் இரண்டு மணிக்கு கெளம்பி ஐந்து மணிக்கு கபினி அணை வந்தடைந்தோம். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரளவின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து அப்புறம் கர்நாடகதுக்கும்  தமிழ்நாடுக்கும் பிரச்சனைய கிளப்பி விட்டு பின் வங்காள விரிகுடாவில் முடிவடைகிறது.

மைசூரு மாவட்டத்தில் உள்ள பீச்சினஹல்லி எனும் ஊரில் கபினி ஆற்றின் குறுக்காய் இந்த ஆணை உள்ளது.



இது ஒரு சுற்றுலா தளம் இல்லை என்றாலும் ஏதோ ஒரு புக்ல இந்த பேர படிச்சா ஞாபகம். அதான் எப்டி இருக்கும்னு பார்க்கலாம்னு போனோம். சிறிய அளவிலான இந்த அணையில் மின்சார உற்பத்தியும் நடக்கிறது. அணையின் மேலே போய் பார்க்கமுன்னு ஏறினோம் இன்னும் பத்து ஸ்டேப் ஏறுனா நீர்பரப்பை பார்க்கலாமூணு ஆவலோட போன எங்களை தடுத்தது அணையின் மேல் செல்ல "அனுமதி இல்லை" என்ற போர்டு... இந்த போர்டை கிழ வச்சி இருந்தா படிக்கட்டு ஏறுனது மிச்சமாய் போயிருக்கும்.

எங்க நண்பன் ஒருவன் வாங்க மேல போகலாம், யாராவது தடுத்தா திரும்பிடலாமுன்னு சிம்பிளா சொல்லிட்டு மேல போக...நாங்களும் பின்தொடர.......


 நினைத்தது போலவே எங்களை இரண்டு அணைக்காவலர்கள் தடுத்து போர்டை படிக்கும் படி சொன்னார்கள். நாங்களும் புதுசா படிக்கற மாதிரி படிச்சுட்டு அப்டியே ஷாக்காகி நின்றோம் (நடித்தோம்). அப்புறம் என்ன நினைச்சானோ சரி வந்து பாருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான் அந்த நல்லவன். பாவம் ரெண்டுபேரு மட்டும் எவளோ நேரம் ஒருத்தன் மூஞ்சிய இன்னொருவன் பாக்கறது, அதான் எங்கள விட்டுட்டானு நினைகிறேன்.




ரொம்ப பிரமாண்ட நீர்பரப்புனு சொல்ல முடியாது, பெரிய ஏறி போல இருந்தது, மாலை நேரமும் குளிர்ந்த காற்றும் கொஞ்சம் நேரம் எங்களை அங்கே இருக்க செய்தது.

முற்றும்.. பயணம் தொடரும்....

Tuesday, August 30, 2016

Bandipur, Iruppu Falls, Kabini Dam - 2


பயணம் என்றாலே எனக்கு அலர்ஜினு சொல்லறவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு அலர்ஜி வருது..யான் இப்டி,,,,,, அப்டினு ஆராயும்போதுதான் இந்த ட்ராவல் அலர்ஜி உலகத்துல ரொம்ப பேர்க்கு இருக்கறது தெரிய வந்தது.

எனக்கும் சின்ன வயசுல அப்பா அம்மா கூட டூர்லாம் போகும்போது ஒரு நாளைக்கு மேல தாங்காது, வாந்தி மயக்கம், யாண்டா வந்தோமுனு இருக்கும், கொஞ்ச கொஞ்சமா பயணங்களை ரசிக்க ஆறமிச்ச அப்புறம் பயணங்களை ரொம்பவும் விரும்ப ஆரமிச்சுட்டேன்.

புதிய மனிதர்கள், உணவுகள், கலாச்சாரம், காலநிலை எல்லாம் அனுபவிக்கற அந்த சுகம் எல்லாமே ரொம்ப பிடிச்சுயிருந்தது. நம்ம ஆளுங்க சில பேர் நிலவுக்கு போனாலும் தமிழ்நாடு ஸ்டைல் ஹோட்டல் எங்க இருக்கு, இட்லி தோசை எங்க கிடைக்கும்னு  தேடுவாங்க, இன்னும் சில புத்திசாலிங்க புலி கொழம்பு, பொடி எல்லாம் ரெடி பண்ணதுக்குகப்புறம் தான் டூர் பிளானே போடுவாங்க. நாங்கல்லாம் இப்டித்தான்னு பெருமையா சொல்றவங்களையும் பார்த்து இருக்கேன். ட்ராவல் பண்றதுக்கே இப்படின்னா பயண கட்டுரைலாம் படிப்பாங்கனு கனவுல கூட நினைக்க கூடாது.

இதுலாம் தெரிஞ்சு இருந்தும் பயண கட்டுரை எழுதறேன்ற பேர்ல யாண்டா மொக்க போடறன்னு நீங்க நினைப்பிங்க..இத ஒரு பத்து பேரு படிச்சாலே அது எனக்கு பெரிய விஷயம் யராவது ஒன்னு ரெண்டு பேருக்காகவாது இது பயன்படும்னா அது ரொம்ப பெரிய விஷயம். அதனாலதான் ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவுல எழுதிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு (நாளைக்குனா நாளைக்கே இல்ல...ஏதோ ஒரு நாள் ) நீங்க அந்த இடத்துக்கு போகும் போது என்ன பாக்கலாம் எங்கு தங்கலாம்னு ஒரு சின்ன டிப்ஸ் இதுல கிடைக்கும் அவ்ளோதான்......

சரி வாங்க அருவி பாக்க போலாம், ஒரு முந்நூறு மீட்டர் நீளத்தை நடந்து சென்று தான் அருவி அடைய முடியும். அந்த அருவி சாரல் அந்த இடம் முழுவதும் இருப்பதால் பார்க்கும் இடங்கலெல்லாம் பசுமை தெரியுதாடி நந்தலாலாதான். இந்த மாதிரி மழை காடுகள் அழகுடன் சேர்த்து ஆபத்தும் நிறைந்தவை, சிறிய அளவிலான விஷப்பூச்சிகள் அதிகம் இருக்குமிடம் இந்த மழை காடுகளே. செல்லும் வழியில் அருவியில் இருந்து வரும் நீர்ஓடையை பார்க்கும் போதே மனதில் அருவி பார்க்கும் ஆர்வமும் அதிகரிக்க ஆரம்பித்து விடுகிறது. சிறிது நேர நடையில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த அருவியின் தரிசனம் கிடைக்கும். குற்றால அருவி போல பப்ப்ப்பரரரபேனு இருக்குமுன்னு நெனச்சா....  சும்மா டெரர்ரா இல்ல இருக்கு....




பயணம் தொடரும்...

Friday, August 5, 2016

Bandipur, Iruppu Falls, Kabini Dam - 1

உடன் பணிபுரிபவரின் கல்யாணத்திற்க்காக வயநாடு செல்ல வேண்டி இருந்தது அதனுடன் இன்னும் சில இடங்களை தேர்வு செய்து அரை குறை திட்டத்துடன் எங்கள் பயணம் ஆரம்பமானது.
காலைல 5.30க்கு எல்லாரும் ஆபீசு கிட்ட வந்துடனும், யாரும் லேட் பண்ண கூடாது OK வா...காலைல நான் ஆபீஸ் கிட்ட போகும்போது மணி 6.30. நானாவது சைக்கிள்ல பெல் இல்லம்தான் வரேன், ஒருத்தன் சைக்கிளே இல்லாம வரான்னு சொல்லற மாதிரி ஒருத்தன் 7.30க்கு வரான். அப்படியே அவனை தூக்கி வண்டில போட்டு ஒரு கும்மு கும்மிட்டு என்ஜின் ஸ்டார்ட் ஆனது 7.40...டிராபிக் இல்லாத பெங்களூர்ல காலை பயணம் கண்டிப்பா நீங்க அனுபவிக்க வேண்டியது...என்னா ஜில்லு! என்னா ஜில்லு!

அது  என்ன மாயமோ மந்திரமோ தெரியல எப்போ மைசூர் ரோடு போனாலும் பிடதில (நம்ம நித்தியானந்தா இருக்கற அதே பிடதி தான்) தட்ட இட்லி சாப்பிட்டு போறது ஒரு பழக்கமா போச்சி, சும்மா சொல்ல கூடாது இட்லி சுமார்தான். டிபன் சாப்பிட்டு என்ன வண்டி ஓட்ட விடாம 30நிமிடத்திற்கு ஒருதடவை கார நிறுத்த சொல்லி டீ குடிக்கறது போட்டோ எடுக்கறதுனு பசங்க ஒரே அலும்பு, எந்த கமிட்மெண்டும் இல்லாம பயணம் செய்யறது கூட நல்ல இருந்தது.

ஏற்கனவே பண்டிபூர் வழியான பயணம் சென்றிருந்தாலும் இந்த முறை நண்பர்களோடு சென்றது ரொம்ப ஜாலி...அதுலயும் பயண அனுபவமமே  இல்லாத ரெண்டு பேர வச்சு செமயா கிண்டல் பண்ணிட்டு சிரிச்சுட்டு போனதுல வயிறு புண்ணாச்சி. இந்த காட்ட கடக்கும் போது ஹார்ன் அடிக்க கூடாது, தம் அடிக்க கூடாது, தண்ணி அடிக்க கூடாது, வண்டிய நடுவுல நிறுத்த கூடாது விலங்குகளுக்கு சாப்பாடு கொடுக்க கூடாது....இப்படி ஏகப்பட்ட கூடாது கூடாது கூடாது....இதை எல்லாம் செக்கபோஸ்ட்ல சொல்லி அனுப்புறாங்க...ஆனா வழில ரெண்டு மூணு கார நிறுத்தி இறங்கி போட்டோ எடுத்ததை பார்க்க நேர்ந்தது, இத பார்த்துட்டு நாமும் இறங்கலாமுன்னு பசங்க சொன்னாங்க அதுக்கு நான் சொன்ன பதில் "நோ". நம்ம நின்னா நம்மள பார்த்துட்டு இன்னும் நாலு பேரு (அது என்ன நாலு பேரு நாப்பது பேருன்னு வச்சிக்கலாம்) நிற்பான். நாங்க கார்லா இருந்த படியே கிளிக்கிட்டு போனதுல மான், மயிலு கிளிக்க முடிஞ்சுது. யானை பாக்கனும்ம்னா காலை நேரத்துல வரணும்.
நம்ம கிளம்புன நேரத்துக்கு யானையோட சாணி தான் பாக்க முடிஞ்சுது.



 இப்படியே அடர்ந்த காட்டில வழி கேக்க கூட ஆல் இல்லாம ஒருவழியா இருப்பு நீர்வீழ்ச்சி அடைந்தோம். எங்க கரோட சேர்த்து ஒரு பத்து வண்டி தான் அந்த பார்கிங்கில இருந்துது. 5ரூபா டிக்கெட் வாங்கி அருவியை நோக்கி நடக்க ஆரம்பிச்சோம். முதலில் எங்களை வர வரவேற்றது கரும்பச்சை தேள்.
இந்த தேளுக்கு எட்டு காலு ஒரு வாலுன்னு சொல்லி போர் அடிக்காம மேட்டருக்கு வரேன். நார்மலா நம்ம ஊருக்குள்ள இருக்கற தேளுக்கு விஷம் ரொம்ப கம்மிதான் நம்மள கடிச்சா  (சிறுவர்களுக்கு பாதிப்பு இருக்கும்) ஒன்னும் ஆகாது ஆனா நம்ம ஆளுங்க பயத்துல உச்சா போறதுலாம் வேற கதை, ஆனா இந்த மாதிரி பெரிய, கருப்பு, நீல தேள்களுக்கு ஆளை கொள்ளுமளவுக்கு கூட விஷம் இருக்கும்.  நான் சின்ன வயசா இருக்கும் போது (இப்பவும் சின்ன வயசுதான்) எங்க வீட்ல "தேள் கடிக்கு இங்கு மருந்து கொடுக்கப்படும்" னு போர்டு வைக்காமலே எங்கம்மா சித்த டாக்டர் ரேஞ்சுக்கு தேள் கடிக்கு தும்பைப்பூ இலையைலாம் கொடுத்து வைத்தியம் பாக்க ஆரமிச்சுட்டாங்க அத நம்பி வாரத்துல ரெண்டுபேராவது வந்து மருந்து வாங்கி சாப்பிட்டு எங்கம்மாவை
டாக்டரா ஆக்க பார்த்தாங்க ஆனா எங்க அப்பா கொட்ன கொட்டுல தேள் கொட்னதுக்கு மருந்து கொடுக்கறதா அம்மா நிறுத்திடாங்க, மேட்டர் என்னனா யாருக்காது விஷம் ஏறி போய்ட்டாங்கன்னா நீ கம்பி தான் என்னனும்னு எங்கப்பா சொன்னதோட சரி , டக்டர் ஆகற ஆசைல தும்பை செடியை போட்டு மூடிட்டாங்க எங்க அம்மா . அதுக்கு அப்புறம் எங்க அம்மாவோட பேஷண்ட்லாம் என்ன ஆனாங்கனு  தெரியல....








பயணம் தொடரும்...

Tuesday, July 26, 2016

HAMPI-5

இன்று காலை நங்கள் சென்றது. கோப்பல் எனும் ஒரு இடம், ஹோஸ்பெட் இல் இருந்து 30 km, முழுவதும் கிராம சாலை வழியாக செல்லவேண்டும் என்பதால் 90 நிமிடங்களில் கோப்பல்அடைந்தோம். ஹம்பியில் பார்த்த அதே மலை தொடர்களை இங்கேயும் பார்க்க முடிகிறது. 

நவ பிருந்தாவனம்: இந்த பெயரை பார்த்துதான் கொஞ்சம் ஏமாந்துட்டன்.
இங்குள்ள ஒரு சிறு கிராமத்தில் இருந்து படகு மூலம் தூங்கபத்ர நதியை கடந்து நவ பிருந்தாவனம் செல்ல வேண்டும். அரசு மூலம் நடத்தப்படும் படகு சேவையில் ஒரு படகு மட்டுமே உள்ளது. அதனால் சிறுது நேரம் காத்திருந்த பின் எங்கள் படகு பயணம் தொடங்கியது. ...

அரைமணி நேர படகு பயணம், 10 நிமிட நடை பயணம் மூலம் நவ பிருந்தாவனம் என்று சொல்லப்படுகின்ற இடத்தயை  அடைந்தோம். நெல்லு அடிக்கற கிரௌண்ட்ல சின்ன சின்ன கோவிலை வச்சு அதுக்கு என்னவோ ஒரு கதை வேற. எனக்கு சாமின்னாலே கொஞ்சம் அலர்ஜி. நான் உள்ளே போகல. இங்க வந்ததே வேஸ்டுனு  நினைக்கும் போது...ஐடியா!...எப்படியும் போட் அடுத்த ட்ரிப் வர ஒரு மணி நேரம் ஆகும். இருக்கவே இருக்கு ஆறு..
ம்ம்ம்ம் அப்புறம் என்ன, அடுத்த ஒருமணி நேரம் ஆத்துல செம ஆட்டம். என் குட்டி பையனுக்கு செம கொண்டாட்டம் தான். 


நவ பிருந்தாவனம்
திரும்பி போட்ல வரும் பொது நல்ல மழை. முதல் முறை ஆறு + படகு + மழை காம்பினேஷன் சூப்பர்...அடுத்தது நங்கள் சென்றது ஒரு மலை கோவில்.

மலைமேல ஒரு சின்ன கோவில், இங்கு வர எல்லாரும் கோவில் வரைக்கும் வந்து திரும்பி விடுகிறார்கள். நாங்க தாண்டி கொஞ்சம் தூரம் சென்றோம். ரொம்ப அருமையா இருந்துது. அந்த மலைல கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் கீழவரும் போது வயத்துல மணி அடிக்க ஆரம்பிச்சுடுச்சு.




 ஹோட்டல் ஒன்னும் சொல்லும்படி இல்ல..வழி எங்கும் கிராமங்கள் தான். நல்ல மழை ஒரு வழியா நாலு மணிக்கு துங்கபத்ரா டேம் வந்தோம். அடை மழையிலும் விடாமல் டேம்மை சுத்தி வருனுமுன்னு ஆசை தான். அனால் குடும்ப நலன் கருதி ஆசைல மழை தண்ணி ஊத்தி அணைச்சிட்டு. அங்க இருந்த ஓர் AQUARIUM மட்டும் பார்த்தோம். எல்லா டேம்ளையும் தண்ணி இருக்கோ இல்லையோ AQUARIUM மட்டும் கண்ணடிப்பா இருக்குபா...


துங்கபத்ரா டேம் அருகில்
நண்பரோட மனைவிக்கு ஹொஸ்பட்ல அக்கா இருக்காங்களாம். அவங்க வீட்டுக்கு கூப்டு இருந்தாங்க. டேம்ல இருந்து கெளம்பி அவங்க வீட்டுல 6 மணிக்கு LUNNER முடிச்சிட்டு, அதாங்க லஞ்ச் + டின்னர் = லன்னர்...விடு ஜுஊட்....

நைட் ரெண்டு மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தோம். அப்ப்பா..போடுற ரெண்டு நாள் லீவ ஆபிசுக்கு...

ஹம்பி பயணம் முற்றும் ஆனால் பயணம் என்றும் தொடரும்....
ஆனந்த விகடன் cover-photo, clicked by RAJA

HAMPI-4

ஹம்பி-ன் இந்த ஒரு பகுதி முழுவதும் வீடுகளோ மற்ற கடைகளோ இல்லை, மறு பகுதியான Virupaksha கோவிலை சுற்றி ஒரு சிறு கிராமம் காணப்படுகிறது. இங்கு நிறைய உணவகம் உள்ளது. மதிய உணவை மாலை முடித்து கொண்டு விருபகஷ  கோவிலை வட்டமிடலாம். 

மலைகள் முழுவதும் பாறைகளாய் நிறைந்திருக்க அதன் அடிவாரம் முழுவதும் அக்கற்களை கொண்டே உருவான கோவில்களாகவும் சிற்பங்களாகவும் இருப்பதை பார்க்கும் போது கொள்ளை அழகு.
Virupakshatemple 
துங்கபத்திரை ஆறு மற்றும் மலை குன்றுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த கோவில் பூஜை திருவிழா என விஜயநகரின் மிச்சம் இங்கு உயிர் உடன் உள்ளது. சூரிய அஸ்தமன நேரம் வரை இங்கு இருந்துவிட்டு இரவு விடுதிவந்தோம் .

 (விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ள சில பகுதிகள்..) 




கல் தூண்









பயணம் தொடரும்...

HAMPI-3

சிவன் கோவில்: இதை பாதாள சிவன் கோவில் என்று அழைக்கின்றர். இது நிலப்பரப்பில் இருந்து ஒரு பத்து அடி ஆழதில் அமைந்து உள்ளது. உள் பிரகார தரை பகுதி முழுவதும் மழை நீரினால் சூழப்பட்டு இருக்கிறது.
Underground siva


Underground siva
Apocalypto படத்தில் வருவது போன்ற ஒரு பாதி பிரமிட் வடிவ மேடை மேல் ஏறி நின்று அழிந்து போன அந்த நகர அமைப்பும் தொல்லியல் துறை மீட்டிடடுத்த கோட்டையின் அமைப்புகளையும் பார்க்கும் போது அந்த காலத்தின் உணர்வு நம் மனதில் தோன்றி மறைகிறது.
 
View from pyramid


இதன் அருகில் ஒரு ஜோடி பெரிய கல்லாலான கதவுகளை பார்க்கும் போது பாதி பிரமிட் வடிவ மேடை ஒரு பெரிய மண்டபமாகவோ அல்லது கோவிலாகவோ இருந்து பின்பு சிதிலமடைந்து இருக்கக்கூடும்.

Pyramid Basement

Stone Doors
மேலும் வழி எங்கும் சிலைகள் (நரசிம்ம, லிங்கம், விநாயகர்) கடந்து சென்றால் யானை பார்க்கிங் வருகிறது. இதன் அமைப்பை பார்க்கும் போதும் இஸ்லாமிய கட்டிடக்கலை போல்தான் தோன்றுகிறது.
Elephant parking

Vitthala Temple: இந்த அழகிய கோவிலில் இருந்து ஒரு 500 மீட்டர் முன்பே நம் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து பாட்டரி கார் மூலம் மட்டுமே இந்த கோவிலை சென்று அடைய முடியும்.  இந்த பாட்டரி கார்கள் அனைத்தும் உள்ளூர் இளம் பெண்களாலே இயக்கப்படுகிறது. கோவிலை சுற்று சூழலில் இருந்து காப்பதும் ஆச்சு, உள்ளூர் பெண்களுக்கு வேலை கொடுப்பதும் ஆச்சு.
Vitthala Temple

கர்நாடக மாநிலத்தின் சின்னமாக உள்ள கல்தேர் இங்குதான் உள்ளது. தேரின் முன்பு உள்ள யானைகள் பிற்பகுதியில் இணைக்க பட்டவை. தேரிலும் மண்டபத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் அருமை.
stone chariot

Vitthala கோவிலின் உள்புரத்தில் உள்ள மண்டபங்களில் மேற்கூரைகள் மிகவும் சேதாரம் அடைந்து காணப்படுகிறது. மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போன்ற இசை தூண்கல் இந்த நாட்டிய மண்டபத்தின் சுற்றிலும் காணப்படுகிறது. பறந்துவிரிந்து காணப்படும் இந்த சமவெளி பகுதியில் தனியே அமைந்திருக்கும் இந்த கோவிலின் அழகை காணும் போது உள்ளத்தில் ஏற்படும் எண்ணங்களை விளக்க வார்த்தை இல்லை.
Shops

Shops

இக்கோவிலை சுற்றி உள்ள கல்தூண் மண்டபங்கள் எல்லாம் அந்நாட்களில் மிக முக்கியமான தங்க, வைர சந்தை நடக்கும் பகுதிகள்.

லோட்டஸ் மண்டபம்:
எல்லா நுழைவாயில் க்கும் சேர்த்து ஒருமுறை டிக்கெட் எடுத்தால் போதும். டிக்கெட் விலை பத்து மட்டும்.
லோட்டஸ் Temple
இந்த மண்டபத்தின் உள்சுவர்களில் நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம்
நீர் செலுத்தப்படுவதால் வெளியில் இருக்கும் வெப்பம் சற்று உள்ளே குறைக்கப்படுகிறது. இதை சுற்றிலும் ஒரு பூங்கா பராமரிக்கபடுகிறது. கல்வி சுற்றுலா வந்த சில மாணவர்களை இங்கே சந்தித்தோம். மைசூர்-ல் இருந்து வருவதாக கூறினார்கள். எனக்கும் பாடப்புத்தகத்தில் விஜயநகர பேரரசு பற்றி படித்தது லைட்டா ஞாபகம்.

பயணம் தொடரும்...


HAMPI-2

ஹோஸ்பேட்டில் இருந்து ஒரு பதினைந்து இருபது நிமிட பயணத்தில் ஹம்பி  அடையாளம். ஹம்பியில் நிறைய வெளிநாட்டவர்களை பார்க்க முடிகிறது. கலை எங்கெல்லாம் இருக்கோ அங்கேயெல்லாம் இவர்களை பார்க்கலாம். நாம தான் இன்னும் காதலி காதலன் பெயரையும் எக்ஸாம் நம்பரையும் எழுதிக்கிட்டு இருக்கோம்.

ஹம்பி முழுவதுமாய் அழகிய கோவில்களும் மண்டபங்களும் நிறைந்து கிடக்கிறது. சிற்ப, கட்டட கலையில் நாட்டம் உள்ள அனைவருக்கும் ஹம்பி ஒரு சொர்கபூமிதான். ஒரு கோவிலுக்கும் மற்ற கோவிலுக்கும் குறைந்தது 500 mrts தூரம் இருக்கும். பொ  று  மை  யா  ரசிச்சு பாக்க ஒரு நாள் போதாது. ஏப்ரல் டு ஜூலை இந்த பக்கம் வந்துடாதீங்க, வெயில் உங்கள் பயணத்தை இனிமையாக்க விடாது. ஆகஸ்ட் டு மார்ச்-நன்று. நவம்பர் டிசம்பர் - மிக நன்று.
இங்கு சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றும் வெளிநாட்டவர்களை பார்க்க முடிகிறது.

முதலில் நம்மை வரவேற்பது  தலரிகட்ட கேட், இங்கு நம் வாகனத்தின் பதிவு எண் குறிக்கப்பட்ட பின்பு நம்மை உள்ளே அனுமதிக்கின்றர்.
தலரிகட்ட கேட்
Temple
பின்பு ஒரு கோவிலும் அதனை தொடர்ந்து பூங்காவுடம் அமைக்கப்பட்ட சிறு மண்டபமும் உள்ளது. வெளி தோற்றம் மண்டபம் போல கட்சி அளித்தாலும் உள்ளாய் அது ஒரு குளம். குளமும் (Indoor swimming pool) அதனை சுற்றி மண்டபமும் உள்ளது. இந்த குளத்திற்கு வரும் நீர் வழிகள் கலைநயம் மிக்க ஒன்று.
பூங்காவுடம் அமைக்கப்பட்ட சிறு மண்டபம்

Indoor swimming pool
அங்கிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி மற்றொரு குளம் (queen's bath) சினிமா படங்கள்ல பார்த்த இந்த குளம், நேரில் பார்க்கும் போது மிக அழகு. ராஜ வம்ச பெண்கள் குளிப்பதற்கு உள்ள இந்த குளத்தில் இந்து இஸ்லாமிய கூட்டு கட்டிடக்கலையை பார்க்க முடிகிறது. இதன் உள்ளே இறங்க தற்போது அனுமதி இல்லை.
Queen's bath
 இக்குளத்திற்கு நீர் வருவதற்கு 6 அடி உயரத்தில் கருங்கல்லினால் ஆன நீண்ட வாய்க்கால் அமைத்து இருப்பது அருமை. குளத்தில் அமைக்க பட்டிருக்கும் கற்களும் மற்ற கருங்கல்லை போல இல்லாமல் வழ வழப்பாக சலவை கற்களை போல உள்ளது. கோவிலும் மற்ற மண்டபங்களும் அடையாளம் காணப்பட்ட பின்புதான், முற்றிலும் மண் மூடியிருந்த இந்த குளத்தை கண்டுபிடித்து சீரமைக்கபட்டதாம்.

பயணம் தொடரும்...

HAMPI-1

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விஜயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்திலேயே உள்ளது.

ஹம்பி, விஜயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது. இது பழைய நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதனால், இதையும் அழிந்த நகரத்தையும் ஒன்றாக எண்ணிக் குழம்பும் நிலை உள்ளது. விஜய நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுதி என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

 ---wiki---

ரொம்ப நாளாகவே ஹம்பி போகணும்னு அவா..  வாய்ப்பு இப்ப தான் வந்தது.

பெங்களூரில் இருந்து சித்ரதுர்கா வரைக்கும் நான்குவழி சாலை வழியாக, சித்ரதுர்காவில் இருந்து ஹோஸ்பெட் வரைக்கும் இரண்டுவழி சாலை பயணமாக செல்லவேண்டும் . சித்ரதுர்கா டு ஹோஸ்பெட் செல்லும் ரோடு அதிக அளவு கனரக வாகனங்கள் பயன்பாடு இருப்பதால் கவனம், ரோடும் சுமார்.

இந்த வழியில் IRON MINE இருப்பதால் அதிக வாகன போக்குவரத்து. வழியில்  ஒரு நீர் தேக்கம் (DAM) இருக்கு, இந்த இடத்தில் இரும்பு அதிக அளவு மண்ணில் இருப்பதால் தண்ணி பார்க்க கருப்பா இருக்கும். காரில் இருந்து பார்த்த படி செல்வது சிறந்தது. இறங்கி போய் பார்க்கும் அளவுக்கு ஒன்னும் அங்கேய் இல்ல.

ஹம்பிக்கு மிக அருகில் (உண்மையா மிக அருகில் தான் 12km) இருக்கும் சிறு நகரம் ஹோஸ்பெட்இல் நிறைய தங்கும் ஹோட்டல் இருப்பதால் அங்கு தங்குவது சிறந்தது.

அதிகாலை எட்டு மணிக்கு பெங்களூர்-ல இருந்து NICE ROAD வழியா தும்கூர்-ல காலைஉணவு (2 தட்ட இட்லி) முடிச்சுட்டு நேரா சித்ரதுர்கா-ல ப்ரண்ட் வீட்ல மதியஉணவு முடிச்சுட்டு.. கொஞ்சம் ரெஸ்ட், 3 மணிக்கு ஸ்டார்ட்.. ஹோஸ்பெட் போறதுக்கு ஐந்து மணி. நேரா ஹோட்டல் (Hotel  PRIYADARSHINI) ரூம் புக் பண்ணிட்டு கொஞ்சம் ரெஸ்ட்,
ஹோட்டல் நல்லா கிளீனா பார்க்கிங் வசதியோட இருக்கு. தூங்குடா கைப்புள்ள ர்ர்ர்ர்ர்.. 
Hotel  PRIYADARSHINI



பயணம் தொடரும்... 

Thursday, March 3, 2016

Stone Car

Price: INR 750
Med:  Water




Mermaid

Price: INR 600
Med:  Pencil








Falls

Price: INR 800
Med:  Water Color






Forest way


Price: INR 1500
Med:  Oil