பயணம் என்றாலே எனக்கு அலர்ஜினு சொல்லறவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு அலர்ஜி வருது..யான் இப்டி,,,,,, அப்டினு ஆராயும்போதுதான் இந்த ட்ராவல் அலர்ஜி உலகத்துல ரொம்ப பேர்க்கு இருக்கறது தெரிய வந்தது.
எனக்கும் சின்ன வயசுல அப்பா அம்மா கூட டூர்லாம் போகும்போது ஒரு நாளைக்கு மேல தாங்காது, வாந்தி மயக்கம், யாண்டா வந்தோமுனு இருக்கும், கொஞ்ச கொஞ்சமா பயணங்களை ரசிக்க ஆறமிச்ச அப்புறம் பயணங்களை ரொம்பவும் விரும்ப ஆரமிச்சுட்டேன்.
புதிய மனிதர்கள், உணவுகள், கலாச்சாரம், காலநிலை எல்லாம் அனுபவிக்கற அந்த சுகம் எல்லாமே ரொம்ப பிடிச்சுயிருந்தது. நம்ம ஆளுங்க சில பேர் நிலவுக்கு போனாலும் தமிழ்நாடு ஸ்டைல் ஹோட்டல் எங்க இருக்கு, இட்லி தோசை எங்க கிடைக்கும்னு தேடுவாங்க, இன்னும் சில புத்திசாலிங்க புலி கொழம்பு, பொடி எல்லாம் ரெடி பண்ணதுக்குகப்புறம் தான் டூர் பிளானே போடுவாங்க. நாங்கல்லாம் இப்டித்தான்னு பெருமையா சொல்றவங்களையும் பார்த்து இருக்கேன். ட்ராவல் பண்றதுக்கே இப்படின்னா பயண கட்டுரைலாம் படிப்பாங்கனு கனவுல கூட நினைக்க கூடாது.
இதுலாம் தெரிஞ்சு இருந்தும் பயண கட்டுரை எழுதறேன்ற பேர்ல யாண்டா மொக்க போடறன்னு நீங்க நினைப்பிங்க..இத ஒரு பத்து பேரு படிச்சாலே அது எனக்கு பெரிய விஷயம் யராவது ஒன்னு ரெண்டு பேருக்காகவாது இது பயன்படும்னா அது ரொம்ப பெரிய விஷயம். அதனாலதான் ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவுல எழுதிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு (நாளைக்குனா நாளைக்கே இல்ல...ஏதோ ஒரு நாள் ) நீங்க அந்த இடத்துக்கு போகும் போது என்ன பாக்கலாம் எங்கு தங்கலாம்னு ஒரு சின்ன டிப்ஸ் இதுல கிடைக்கும் அவ்ளோதான்......
சரி வாங்க அருவி பாக்க போலாம், ஒரு முந்நூறு மீட்டர் நீளத்தை நடந்து சென்று தான் அருவி அடைய முடியும். அந்த அருவி சாரல் அந்த இடம் முழுவதும் இருப்பதால் பார்க்கும் இடங்கலெல்லாம் பசுமை தெரியுதாடி நந்தலாலாதான். இந்த மாதிரி மழை காடுகள் அழகுடன் சேர்த்து ஆபத்தும் நிறைந்தவை, சிறிய அளவிலான விஷப்பூச்சிகள் அதிகம் இருக்குமிடம் இந்த மழை காடுகளே. செல்லும் வழியில் அருவியில் இருந்து வரும் நீர்ஓடையை பார்க்கும் போதே மனதில் அருவி பார்க்கும் ஆர்வமும் அதிகரிக்க ஆரம்பித்து விடுகிறது. சிறிது நேர நடையில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த அருவியின் தரிசனம் கிடைக்கும். குற்றால அருவி போல பப்ப்ப்பரரரபேனு இருக்குமுன்னு நெனச்சா.... சும்மா டெரர்ரா இல்ல இருக்கு....
பயணம் தொடரும்...
No comments:
Post a Comment