Death Valley- Eastern California
கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு (Death Valley).
இந்த இடத்தில் கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் (134 ஃபேரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தண்ணீர் இல்லாமல் அதிகபட்சமாக 14 மணி நேரம்தான் இங்கு உயிருடன் வாழ முடியும்.
கற்கள் தன்னிச்சையாக நகரும் அதிசயமும் இங்குதான் நிகழ்கிறது.
நகரும் கற்கள் என அழைக்கப்படும் கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும்.
இத்தகைய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது. இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும் நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன. கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது, எனினும் இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் உலாவுகின்றன.
ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு இவை நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசைமாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன. ஒன்றாக புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன, சிலவேளைகளில் வந்தவழியே திரும்பவும் நகர்தலும் உண்டு. இரு ஒரே அளவிலான கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுண்டு
பெரும்பாலான நகரும் கற்கள் பிளேயாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள 850 அடி (260மீ) உயர கரும் தொலமைற்றுக்களாலான குன்றுகளில் இருந்து உருவாகின்றன, ஆனால் சில ஊடுருவிய தீப்பாறைகள் அருகில் உள்ள சரிவில் தோன்றுகின்றன. பொதுவாக இச் சுவட்டுத்தடங்கள் பத்து தொடக்கம் 100 அடி நீளமாகவும் 12 அங்குலம் (8-30செ.மீ) அகலம் கொண்டதாகவும் ,சாதாரணமாக ஒரு அங்குலத்துக்கும் (2.5 செ.மீ) குறைவான ஆழமாகவும் காணப்படுகின்றது. கற்கள் அசைவதற்குத் தேவைப்படக்கூடிய சிறப்பான சூழ்நிலை எனக் கருதப்படுபவை:
Danakil Desert - Ethiopia
ஆப்ரிக்கா கண்டத்தில் எத்தியோப்பியாவில் உள்ளது இந்த டானாகில் பாலைவனம்.சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் கொண்ட இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் சீறும் எரிமலைகளும் உண்டு. நச்சு வாயுக்களை உமிழும் வெந்நீர் ஊற்றுகளும்உண்டு.
எப்போது எது வெடிக்கும் என்றே தெரியாத இந்தக் கொடூரமான இடத்தை ’’உலகின் நரகம்’’ என்கிறார்கள். ஆனாலும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.
Mount Washington (New Hampshire) - United States of America
உலகிலேயே அதிவேகமான காற்று வீசும் இடம் இந்த மவுண்ட் வாஷிங்டன்.
அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு 203 மைல்கள் வேகத்தில் இங்கு காற்று வீசியிருக்கிறது. (ஷோயப் அக்தர் போட்டதே மணிக்கு 160 கிமீ தான்) மேலும் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் குளிர், திடீரென்று ஏற்படும் பனிப்பொழிவு என மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் இந்த சிகரம், உலகின் உயரமான (கடல் மட்டத்தில் இருந்து 6,288 அடி) மலைச் சிகரங்களுள் ஒன்று.
Mount Sinabung - Indonesia
இந்தோனேசியா - சுமத்ரா தீவில் உள்ளது இந்த மாபெரும் மலை.. பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும் இந்த மலைதான் கடந்த ஏழு வருடங்களாக அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. ஆம், இந்த சினாபுங் மலை ஓர் எரிமலை.
இந்த எரிமலை 1600 ஆம் ஆண்டில் இருந்து சீற்றமடையாமல் இருந்து வந்துள்ளது. முதற்தடவையாக இது 2010 ஆகஸ்ட் 29 அதிகாலைவெடிக்க ஆரம்பித்தது. 1.5 கிமீ உயரத்திற்கு இதன் தூசுகள் வீசப்பட்டன. குழம்புகள் எரிமலைவாயில் வீழ்ந்தன.
2010 செப்டம்பர் 3 வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 கிமீ உயரத்திற்கு தூசுகள் கிளம்பின. செப்டம்பர் 7 இல் மீண்டும் வெடித்தது. இதன் சீற்றம் அதிகமானதாக இருந்தது. 2013
செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு சினாபுங் மீண்டும்
வெடித்தது. 3,700 பேர் இருப்பிடங்களை விட்டு நகர்ந்தனர். மீண்டும் 2013 நவம்பர் 5 இல் வெடித்ததில், வானில் 7-கிமீ தூரத்திற்கு தூசுகள் கிளம்பின.
2014 சனவரி 4 இல் மீண்டும் வெடித்தது. 4,000-மீட்டர் உயரத்திற்கு தூசுகள் கிளம்பின. 2014 பெப்ரவரி 1 இல் மீண்டும் வெடித்தது. 14 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்பள்ளி மாணவர்கள். இவர்கள் எரிமலையைக் காண வந்திருந்தனர்.
கடைசியாக 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொடர்கிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும் , சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?
ilha de queimada grande - snake island - Brazil
பிரேசிலில் இருக்கும் குட்டி பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு ஐந்து பாம்புகள் இருக்கிறதென்றால், இந்தத்தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள்.
இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம்கூட ஆட்டோமேட்டட்தான்.. ஏனென்றால் இங்கிருக்கும் பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையவை.
பல்வேறு காலநிலைகளை கொண்ட இத்தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும் பிரேசில் ராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Madidi National Park - Bolivia
உலகத்தில் வித்தியாசமான, விதவிதமான உயிரினங்கள் அதிகம் வாழும் இடம் . இங்கிருக்கும் பறவை இனங்கள் மட்டுமே ஆயிரத்தைத் தாண்டுகிறது.
வித்தியாசமான
உயிரினங்கள் இருப்பதாலோ என்னவோ, இங்கே செடிகளை உரசினாலே எரிச்சலும்,
மயக்கமும் வரும் அளவுக்கு தாவரங்களில் தொடங்கி, விலங்குகள் அனைத்தும்
மிகவும் ஆபத்தான, விஷத்தன்மை உடைய ஜந்துக்கள். இங்கு சென்று உடலில் சிறிய கீறல் ஏற்பட்டால்
கூட ஒட்டுண்ணிகளால் மரணம் ஏற்படலாம.
கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு (Death Valley).
இந்த இடத்தில் கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் (134 ஃபேரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தண்ணீர் இல்லாமல் அதிகபட்சமாக 14 மணி நேரம்தான் இங்கு உயிருடன் வாழ முடியும்.
கற்கள் தன்னிச்சையாக நகரும் அதிசயமும் இங்குதான் நிகழ்கிறது.
நகரும் கற்கள் என அழைக்கப்படும் கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும்.
இத்தகைய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது. இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும் நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன. கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது, எனினும் இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் உலாவுகின்றன.
ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு இவை நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசைமாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன. ஒன்றாக புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன, சிலவேளைகளில் வந்தவழியே திரும்பவும் நகர்தலும் உண்டு. இரு ஒரே அளவிலான கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுண்டு
பெரும்பாலான நகரும் கற்கள் பிளேயாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள 850 அடி (260மீ) உயர கரும் தொலமைற்றுக்களாலான குன்றுகளில் இருந்து உருவாகின்றன, ஆனால் சில ஊடுருவிய தீப்பாறைகள் அருகில் உள்ள சரிவில் தோன்றுகின்றன. பொதுவாக இச் சுவட்டுத்தடங்கள் பத்து தொடக்கம் 100 அடி நீளமாகவும் 12 அங்குலம் (8-30செ.மீ) அகலம் கொண்டதாகவும் ,சாதாரணமாக ஒரு அங்குலத்துக்கும் (2.5 செ.மீ) குறைவான ஆழமாகவும் காணப்படுகின்றது. கற்கள் அசைவதற்குத் தேவைப்படக்கூடிய சிறப்பான சூழ்நிலை எனக் கருதப்படுபவை:
- ஈரப்பதமான ஆனால் நீரால் நிரம்பாத மேற்பரப்பு,
- மெல்லிய களிமண் படலம்,
- தொடக்க நிலை அசைவிற்கான விசையாக மிக்க வன்மையான காற்று,
- கற்களைத் தொடர்ச்சியாக அசைப்பதற்கு வலிமை கொண்ட நிலையாக உள்ள தொடர்ச்சியான காற்று
Danakil Desert - Ethiopia
ஆப்ரிக்கா கண்டத்தில் எத்தியோப்பியாவில் உள்ளது இந்த டானாகில் பாலைவனம்.சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் கொண்ட இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் சீறும் எரிமலைகளும் உண்டு. நச்சு வாயுக்களை உமிழும் வெந்நீர் ஊற்றுகளும்உண்டு.
எப்போது எது வெடிக்கும் என்றே தெரியாத இந்தக் கொடூரமான இடத்தை ’’உலகின் நரகம்’’ என்கிறார்கள். ஆனாலும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.
Mount Washington (New Hampshire) - United States of America
உலகிலேயே அதிவேகமான காற்று வீசும் இடம் இந்த மவுண்ட் வாஷிங்டன்.
அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு 203 மைல்கள் வேகத்தில் இங்கு காற்று வீசியிருக்கிறது. (ஷோயப் அக்தர் போட்டதே மணிக்கு 160 கிமீ தான்) மேலும் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் குளிர், திடீரென்று ஏற்படும் பனிப்பொழிவு என மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் இந்த சிகரம், உலகின் உயரமான (கடல் மட்டத்தில் இருந்து 6,288 அடி) மலைச் சிகரங்களுள் ஒன்று.
Mount Sinabung - Indonesia
இந்தோனேசியா - சுமத்ரா தீவில் உள்ளது இந்த மாபெரும் மலை.. பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும் இந்த மலைதான் கடந்த ஏழு வருடங்களாக அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. ஆம், இந்த சினாபுங் மலை ஓர் எரிமலை.
இந்த எரிமலை 1600 ஆம் ஆண்டில் இருந்து சீற்றமடையாமல் இருந்து வந்துள்ளது. முதற்தடவையாக இது 2010 ஆகஸ்ட் 29 அதிகாலைவெடிக்க ஆரம்பித்தது. 1.5 கிமீ உயரத்திற்கு இதன் தூசுகள் வீசப்பட்டன. குழம்புகள் எரிமலைவாயில் வீழ்ந்தன.
2014 சனவரி 4 இல் மீண்டும் வெடித்தது. 4,000-மீட்டர் உயரத்திற்கு தூசுகள் கிளம்பின. 2014 பெப்ரவரி 1 இல் மீண்டும் வெடித்தது. 14 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்பள்ளி மாணவர்கள். இவர்கள் எரிமலையைக் காண வந்திருந்தனர்.
கடைசியாக 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொடர்கிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும் , சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?
ilha de queimada grande - snake island - Brazil
பிரேசிலில் இருக்கும் குட்டி பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு ஐந்து பாம்புகள் இருக்கிறதென்றால், இந்தத்தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள்.
இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம்கூட ஆட்டோமேட்டட்தான்.. ஏனென்றால் இங்கிருக்கும் பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையவை.
பல்வேறு காலநிலைகளை கொண்ட இத்தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும் பிரேசில் ராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Madidi National Park - Bolivia
உலகத்தில் வித்தியாசமான, விதவிதமான உயிரினங்கள் அதிகம் வாழும் இடம் . இங்கிருக்கும் பறவை இனங்கள் மட்டுமே ஆயிரத்தைத் தாண்டுகிறது.
No comments:
Post a Comment